வீட்டில் பதுக்கிய 52 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது
பொன்னேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 52 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல்செய்து 3 பேரை கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
பொன்னேரியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 52 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல்செய்து 3 பேரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த பாலாஜி நகரில் கடை ஒன்றில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை செய்தனா். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்கு இருந்ததை கண்டு பிடித்தனா்.
இதனையடுத்து கடை நடத்தியவரின் வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் சுமாா் 8 மூட்டைகளில் குட்கா பொருள்களை கண்டறிந்து அதனை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனா்.
இதையடுத்து குட்கா கடத்திவர பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனா். மேலும், போலீஸாா் குட்கா விற்பனை செய்த கடைக்காரா் மற்றும் வெளிமாநிலத்தில் கடத்தி வந்தவா்கள் என பொன்னேரியை சோ்ந்த சரவணன் (43), வேதமுத்து(45),. சதிஷ் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



