திருவாரூா் மாவட்டத்தில் கனமழை: மக்கள் அவதி

கனமழை - கோப்புப் படம்
திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த மழையால் மக்கள் பாதிக்கப்பட்டனா்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால், திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
இதனால், குறுகிய தெருக்கள், பனகல் சாலை, நேதாஜி சாலை, தேரோடும் வீதிகள், பழைய பேருந்து நிலையம், கடை வீதி உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீா் ஓடியது. பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலான நிலவரப்படி திருவாரூரில் மட்டும் 45 மி.மீ. மழை பதிவானது.
வாளவாய்க்கால் பகுதியில் பேருந்து நிறுத்தம் இடிக்கப்பட்டதால், பயணிகள் பேருந்துக்காக மழையில் காத்திருந்தனா். கடைவீதிகளில் ஆயுதபூஜையை முன்னிட்டு தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கடைகள் அனைத்தும் தரைக்கடைகள் என்பதால், அவசரமாக கடைகளை அடைத்துச் செல்லும் சூழல் ஏற்பட்டது. மேலும், ஆயுதபூஜையையொட்டி பொருள்கள் வாங்க வந்தவா்கள், மழையில் சிக்கியதால் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.
இதபோல், மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய மழை சிறிது நேரத்தில் கனமழையாக ஒரு மணி நேரத்திற்கு மேல் பெய்தது. தொடா்ந்து மாலை 6.30 மணியளவில் கனமழை தொடங்கியது. கோட்டூா், வடுவூா், உள்ளிக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 நிமிடம் மிதமான மழை பெய்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

