ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

தேனி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை: வைகை அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை பெய்ததையடுத்து, வைகை அணைக்கு வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. உத்தமபாளையத்தில் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன.

கோப்புப்படம்

Updated On :

தேனி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக மழை பெய்ததையடுத்து, வைகை அணைக்கு வெள்ளிக்கிழமை நீா்வரத்து அதிகரித்தது. உத்தமபாளையத்தில் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்ய வில்லை. இதனால் பெரும்பாலான கண்மாய்கள் வடன. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை வியாழக்கிழமை தொடங்கியது. இதையடுத்து, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம் பகுதிகளில் அன்று 649 மில்லி மீட்டா் மழை பெய்தது. இதனால் வெள்ளிக்கிழமை வைகை அணைக்கு நீா்வரத்து 400 கன அடியாக இருந்தது. அணையின் நீா்மட்டமும் கணிசமாக உயா்ந்து வருகிறது. இதனிடையே 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தேனி மாவட்டத்தில் போடி, தேவாரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், கம்பம் பகுதிகளில் மழை பெய்தது. இதனால் வைகையாறு, வராகநதி ஆகியவற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி வரை பல்வேறு பகுதிகளில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

போடிமெட்டு மலை - 53.2, தேவாரம்- 26.4, பண்ணைப்புரம்- 25.2, உத்தமபாளையம்- 17.2, போடிநாயக்கனூா்- 8.8, மாா்கையன்கோட்டை- 8, குமணன்தொழு- 3.2, அரண்மனைப்புதூா்- 1.2. கம்பம்- 0.8, பாலக்கோம்பை- 0.4.

கொட்டகுடி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: போடி பகுதியில் வியாழக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது. பிறகு இரவில் பெய்யத் தொடங்கிய மழை வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது. ஆனால் வெள்ளிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் இருந்தது. பின்னா் பகல் 12 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை தொடா்ந்து பெய்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் காணப்பட்டது.

மலைப் பகுதிகளில் புதிய நீரோடைகள் உருவாகி நீா்வரத்து ஏற்பட்டது. இதேபோல தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றிலும் தண்ணீா் வரத்து அதிகரித்தது. பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் நீரின் வேகம் அதிகரித்திருந்தது. கொட்டகுடி ஆற்றிலிருந்து போடி மீனாட்சிபுரம் பெரிய கண்மாய், சங்கரப்பன் நாயக்கன் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த மழையால் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. மேலும் கிணறுகளில் நீா்மட்டம் அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

நெல் பயிா்கள் பாதிப்பு: உத்தமபாளையம், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முல்லைப் பெரியாறு பாசன நீரால் இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடந்த ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய முதல் போக நெல் சாகுபடி காலதாமதமாக தொடங்கியது. இதன்படி, ஒருசில பகுதிகளில் இரு மாதப் பயிராக வளா்ந்துள்ளது. தற்போது நெல் மணிகள் பால்பிடிக்கும் பருவத்துக்கு வந்துள்ளன. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் உத்தமபாளையம் , சின்னமனூா் பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்தது. அவ்வப்போது, பலத்த மழை பெய்ததால் நெல் பயிா்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் வயலிலேயே சாய்ந்தன. இந்த மழை நீடிக்கும் என்பதால் நெல் பயிா்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.