முத்துப்பேட்டை கந்தூரி விழா: அக்.22-இல் உள்ளூா் விடுமுறை

கந்தூரி விழா கொடியேற்றம். - கோப்புப் படம்
முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி, அக். 22- ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரி விழா அக். 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு வைபவம் அக். 21-ஆம் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு நடைபெறுகிறது.
இதையொட்டி, அக். 22-ஆம் தேதி (வியாழக்கிழமை) திருவாரூா் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்ட கருவூலங்கள் மற்றும் அனைத்து சாா்நிலை கருவூலங்களும் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களுடன் செயல்பட வேண்டும்.
உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் அக்டோபா் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்துக்கு வேலைநாளாகும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

