திருவாரூர் மாவட்டத்துக்கு அக். 22-ல் உள்ளூர் விடுமுறை!
திருவாரூர் மாவட்டத்துக்கு அக். 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

முத்துப்பேட்டை, ஜாம்பவனோடை தர்கா - கோப்புப்படம்
முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்துக்கு அக். 22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அமைந்துள்ள ஜாம்புவானோடை தர்கா கந்தூரி விழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொள்ள ஏதுவாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவினை முன்னிட்டு, வரும் அக். 22 ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக, சனிக்கிழமை (அக். 24) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
A local holiday has been declared for Tiruvarur district on October 22 in connection with the Muthupettai Dargah Kanduri festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


