ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்
நீடாமங்கலம் ரயில்நிலையம் அருகே சரக்கு ரயிலில் அடிப்பட்டு, முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சரக்கு ரயில் வந்துகொண்டிருந்தது. நீடாமங்கலம் அருகே வந்தபோது முதியவா் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தாா்.
ரயில்வே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ரயிலில் அடிப்பட்டு இறந்தவா் நீடாமங்கலம் அருகேயுள்ள சித்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணியன் (70) என்பது தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

