சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ரயிலில் அடிபட்டு அரிசி ஆலை உரிமையாளா் உயிரிழப்பு

தருமபுரியில் ரயிலில் அடிபட்டு அரிசி ஆலை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி... - பிரதிப் படம்

Published On :

தருமபுரியில் ரயிலில் அடிபட்டு அரிசி ஆலை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (75). இவா் அதே பகுதியில் சொந்தமாக அரிசி ஆலை நடத்தி வந்தாா். இவா் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால் தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:55 மணிக்கு தொப்பூா் ரயில்வே ஸ்டேஷன் அருகே, சண்முகம் தண்டவாளத்தை கடந்தபோது, அவ்வழியாக சென்ற பெங்களூரு - காரைக்கால் விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.