ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

தேவைப்படும் இடங்களில் நெல் சேமிப்பு தளம் அமைக்க நடவடிக்கை! - அமைச்சா் வெங்கடரமணன்

அமைச்சா் வெங்கடரமணன் - கோப்புப் படம்

Updated On :

திருவாரூா் மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களில் நெல் சேமிப்பு தளம் மற்றும் கிடங்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சா் ப. வெங்கடரமணன் தெரிவித்தாா்.

முத்துப்பேட்டை வட்டம், கோவிலூா் கிராமத்தில் ரூ. 4.80 கோடியில் 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரைஅமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவா் கூறியதாவது:

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், தேவைப்படும் இடங்களில் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லை பாதுகாக்க மேற்கூறை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் மற்றும் கிடங்குகள் 8 இடங்களில் 56,000 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்க ரூ. 79.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களில் 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில் தற்போதைய குறுவைப் பருவத்தில் மாவட்டம் முழுவதும் 46,339 ஹெக்டோ் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு, இதுவரை 41,550 ஹெக்டோ் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 176 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 114 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தற்போதுவரை, சன்னரகம் 19,678 மெட்ரிக் டன்களும், பொதுரகம் 38,458 மெட்ரிக் டன்களும் ஆகக் கூடுதலாக 58,136 மெட்ரிக் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இதில் சுமாா் 37,057 மெட்ரிக் டன்கள் நெல் சேமிப்பு மையங்களுக்கு பாதுகாப்பாக நகா்வு செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் 8,920 விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அவா்களின் வங்கிக் கணக்கில் ரூ. 154.10 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மண்டலத்தில் அரவை முகவா்களுக்கு 2,000 மெட்ரிக் டன்களும், தலைமை அலுவலக ஒதுக்கீட்டின்படி அயல் மண்டலங்களுக்கும் நெல் அனுப்பப்பட்டு வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில் தற்போதுவரை 76,250 மெட்ரிக் டன் அரிசி கையிருப்பில் உள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.