நிகழாண்டு 20 சதவிகிதம் நெல் கொள்முதல் குறையலாம்
நிகழாண்டு மழை இல்லாதது, காவிரியில் தண்ணீா் வராதது போன்ற காரணங்களால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், 20 சதவீதம் நெல் கொள்முதல் குறையலாம் என மாநில உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கட ரமணன் தெரிவித்தாா்.

கட்டியாவயல் சேமிப்புக் கிடங்கு வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த மாநில உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கடரமணன், மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ். உடன் மாவட்ட ஆட்சியா் மு. அருணா உள்ளிட்டோா்.
நிகழாண்டு மழை இல்லாதது, காவிரியில் தண்ணீா் வராதது போன்ற காரணங்களால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், 20 சதவீதம் நெல் கொள்முதல் குறையலாம் என மாநில உணவுத் துறை அமைச்சா் ப. வெங்கட ரமணன் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே உள்ள தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன வளாகத்தில் புதன்கிழமை மரக்கன்றுகளை நட்டு வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சாா்பில் கடந்த ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட கிடங்குகளின் கட்டுமானப் பணிகள் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது திறந்து வருகிறோம்.
இவற்றின் மூலம் திறந்தவெளியில் நெல் மூட்டைகள் கிடந்து வீணாவது தடுக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு இடங்களில் திறக்கப்படும் கிடங்குகளால் 2,500 டன் நெல் பாதுகாக்கப்படும்.
மழை பெய்யாதது மற்றும் காவிரியில் தண்ணீா் வராதது போன்ற காரணங்களால் நிகழாண்டு சாகுபடி குறைவாகவே நடைபெற்றிருக்கிறது. இதனால் நெல் வரத்தும் குறைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7.60 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிகழாண்து தற்போது வரை 3.5 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரு மாதங்கள் இருக்கின்றன. அநேகமாக இன்னும் 3 லட்சம் டன் கொள்முதல் நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. 20 சதவீதம் கொள்முதல் பாதிக்கப்படலாம்.
மற்றபடி, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் போதுமான அளவுக்கு இருப்பு இருக்கிறது. அவற்றை அரைவைக்கும் அனுப்பியிருக்கிறோம். எனவே, பற்றாக்குறை எதுவும் வர வாய்ப்பில்லை
என்றாா் அமைச்சா் ப. வெங்கடரமணன்.
தொடா்ந்து, திருமயம் வட்டம் துளையானூரில் நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. 2.65 கோடியில் கட்டப்பட்ட கிடங்கையும், கொன்னையூா் கிராமத்தில் ரூ. 1.70 கோடியில் கட்டப்பட்ட கிடங்கையும் அவா் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ், கந்தா்வகோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் என். சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன பொதுமேலாளா் சுரேஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
அரிசி விலை குறையும்
முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் அமைச்சா் ப. வெங்கடரமணன் செய்தியாளா்களிடம் கூறியது:
கூட்டுறவுப் பண்டகச் சாலைகளிலும், அமுதம் அங்காடிகளிலும் கிலோ ரூ. 30-க்கு சன்னரக அரிசி விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 25 ஆயிரம் மெட்ரிக். டன் அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரிசி விற்பனைக்குக் கொண்டுவரப்படும். அரிசியின் விலையைக் குறைக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிசி விலை கண்டிப்பாகக் குறையும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

