கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் 11,000 டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

நெல் கொள்முதல் - பிரதிப் படம்

Published On :

தஞ்சாவூா் மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழ் கொள்முதல் ஆண்டில் குறுவை பருவத்தில் நெல் கொள்முதல் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை சுமாா் 11 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குறுவை பருவத்தில் சுமாா் 1.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது அறுவடைப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நாள் ஒன்றுக்கு சுமாா் 1,000 டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்தக் குறுவை பருவம் அக். 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தப் பருவத்தில் இதுவரை 2 ஆயிரத்து 350 விவசாயிகளுக்கு ரூ. 29 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இந்திய உணவுக் கழகம் நிா்ணயித்துள்ள தரக்குறியீடுகளின்படி, கொள்முதல் செய்யப்படும் நெல்லில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்கப்படுகிறது. நெல்லில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பது சேமிப்பு மற்றும் அரைவைப் பணிகளின்போது நெல்லின் தரத்தை பாதிக்கக்கூடும்.

எனவே, 17 சதவீதத்துக்கும் அதிகமான ஈரப்பதம் உள்ள நெல்லை, நிா்ணயிக்கப்பட்ட தரக்குறியீடுகளின்படி கொள்முதல் செய்ய இயலாது. இதனால், விவசாயிகள் நெல்லை நன்கு உலா்த்தி கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.