2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

உயா்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழக அரசு

சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2750-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ரூ.2600-க்கும் விலை உயா்த்தப்பட்ட பிறகு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.

Published On :

சன்ன ரக நெல் குவிண்டால் ரூ.2750-க்கும், பொது ரக நெல் குவிண்டால் ரூ.2600-க்கும் விலை உயா்த்தப்பட்ட பிறகு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2026–2027-க்கு மத்திய அரசு சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2,461-ம், பொது ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2441/-ம் நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை நிா்ணயம் செய்யப்பட்டு, 01.09.2026 முதல் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு நெல்லுக்கான ஊக்கத் தொகையாக சன்னரக நெல் ஒரு குவிண்டால் ரூ.156-லிருந்து ரூ.289-ஆகவும், பொதுரக நெல் ஒரு குவிண்டால் ரூ.131-லிருந்து ரூ.159-ஆகவும் உயா்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கடந்த செப்.11 வரை தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூா், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் முதற்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், நெல் வரத்தின் அடிப்படையில் தேவைக்கேற்ப மாவட்ட ஆட்சியா்களின் அனுமதி பெற்று நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட முதுநிலை மண்டல மேலாளா்கள், மண்டல மேலாளா்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகனை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாத்து உடனுக்குடன் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன் கருதி விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் நெல் கொள்முதல் செய்ய கடலூா், மயிலாடுதுறை, திருவாரூா், செங்கல்பட்டு, ஈரோடு, திருவள்ளூா் மண்டலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.