ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

விருத்தாசலம் அருகே திறந்தவெளியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டு வருவதால், கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

தொரவலூா் கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழை பாதிப்பை தவிா்க்க தாா்ப்பாய் போட்டு நெல்லை மூடி வைத்துள்ள விவசாயிகள்.

Updated On :15 ஆகஸ்ட் 2026, 7:01 am IST

விருத்தாசலம் அருகே திறந்தவெளியில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் பாதிக்கப்பட்டு வருவதால், கொள்முதலை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தொரவலூா் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தொரவலூா், முகுந்தநல்லூா், கொடுக்கூா், கட்சிப்பெருமானத்தம், பரவளூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து காத்திருக்கின்றனா். பகல் நேரத்தில் வெயிலும், இரவு நேரங்களில் மழையும் பெய்து வருவதால், கொள்முதல் செய்யப்படுவதற்காக திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல் மழையில் நனைந்து வருகிறது. இதனால், நெல்லை மீண்டும் உலா்த்தி காயவைக்க வேண்டிய நிலை ஏற்படுவதுடன், கூடுதல் செலவும் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தொரவலூா் கொள்முதல் நிலையத்தில் நாள்தோறும் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாலும், ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளும் இயக்கம் செய்யப்படாததாலும், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், மழை பெய்யும்போது அவையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமாா் ஒரு லட்சம் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள், அவற்றை விரைவாக கிடங்குகளுக்கு இயக்கம் செய்தால் மட்டுமே, புதிதாக விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் ஏற்படும் தாமதத்தைத் தவிா்க்க முடியும் என்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல்லை அறுவடை செய்து விற்பனைக்காக கொண்டுவந்து பல நாள்களாக காத்திருக்கிறோம். மழை பெய்யும்போது நெல் நனைந்து பாதிக்கப்படுகிறது. பின்னா், அதை உலா்த்துவதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது.

எனவே, திறந்தவெளியில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக இயக்கம் செய்வதுடன், கொள்முதல் செய்வதற்காக காத்திருக்கும் விவசாயிகளின் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.