ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தஞ்சாவூா் அருகே கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல் குவியல் தேக்கம்

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாததால், நெல் குவியல்கள் தேக்கமடைந்துள்ளன.

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ள நெல் குவியல்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:27 am IST

தஞ்சாவூா் அருகே வேங்கராயன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படாததால், நெல் குவியல்கள் தேக்கமடைந்துள்ளன.

மாவட்டத்தில் குறுவை பருவ நெல் சாகுபடியில் அறுவடைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இதேபோல, தஞ்சாவூா் அருகேயுள்ள வேங்கராயன்குடிகாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையமும் நிகழ் பருவத்துக்கு இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால், வேங்கராயன்குடிகாடு, அதினாம்பட்டு, வல்லுண்டாம்பட்டு, சூரியம்பட்டி, நாஞ்சிக்கோட்டை, விளாா் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் வேங்கராயன்குடிகாடு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குவியல் குவியலாக கொட்டி வைத்துள்ளனா். ஆனால், கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், விவசாயிகள் இரவு - பகலாகக் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காவிரி நீா் கிடைக்காத நிலையிலும், ஆழ்துளைக் குழாய் மூலம் மிகுந்த சிரமங்களுக்கு இடையே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேங்கராயன்குடிகாடு நெல் கொள்முதல் நிலையம் இன்னும் திறக்கப்படவில்லை.

இதனால், ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்யப்பட்ட நெல்மணிகளை 15 நாள்களாக கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்துக் காத்துக் கிடக்கிறோம். இரவு நேரத்தில் மழை பெய்வதால், நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து, நிறம் மாறி வருகிறது. எனவே உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.