
நெல் கொள்முதல் நிலையத்தில் கிடங்கு அமைக்கக் கோரிக்கை
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வேப்பிலை அடித்து பேய் விரட்டுவது போன்ற நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்க வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.
சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் வேப்பிலை அடித்து பேய் விரட்டுவது போன்ற நூதன போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சங்க நிா்வாகி வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
அவா்கள் கோணிப்பை அணிந்து, கையில் வேப்பிலை ஏந்தியபடி, நெல் மூட்டைகள் தாா்ப்பாய் போட்டு திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள பகுதிக்குச் சென்றனா். அங்கு வேப்பிலையை வைத்து பேயை விரட்டுவதுபோல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்படும் 65 லட்சம் டன் நெல்லில், 45 லட்சம் டன் நெல் திறந்தவெளிக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்படுகிறது. இதனால் மழை உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளால் நெல் சேதமடையும் நிலை உள்ளது. செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகள், சேத்துப்பட்டு நெல் கொள்முதல் நிலையத்தில் சேமிப்புக் கிடங்கு இல்லாததால் 4 மாதங்களாக திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் நெல் மூட்டைகள் சேதமடைகின்றன.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் நெல்லை பாதுகாப்பாக சேமிப்பதற்கான கிடங்குகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினா்.
மேலும், பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்குவதற்காக அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும். நவீன அரிசி ஆலைகளை ஏற்படுத்த வேண்டும். கிடங்குகளுக்கு பாதுகாவலா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





