மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் மாற்றியமைப்பு! திருச்சி சிவா, கனிமொழிக்கு மீண்டும் தலைமைப் பொறுப்பு!தேஜஸ் போா் விமானத் திட்ட தாமதத்தால் பாதிப்பு: விமானப் படை தலைமைத் தளபதிபிரேஸிலில் இன்று அதிபா் தோ்தல்ஹசீனா நாடு கடத்தல்: காலக்கெடு இல்லை - இந்தியா

மயிலாடுதுறை: 1.28 லட்சம் மெ.டன் நெல் தேக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.28 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரவைக்கு இயக்கம் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன.

வில்லியநல்லூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள்.

Published On :

மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.28 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரவைக்கு இயக்கம் செய்யப்படாமல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 97,000 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு, அதில் 95 சதவீதம் அறுவடை நிறைவடைந்துள்ளன. விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 115 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. பெரும்பாலான இடங்களில் கொள்முதல் நிறைவடைந்துவிட்டதால், தற்போது 30 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையம் செய்யப்பட்டு வருகிறது.

நடப்பு குறுவை பருவத்தில் இதுவரை 52,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போதுவரை 23,000 மெட்ரிக் டன் நெல் மட்டுமே அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த சம்பா பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 99,000 மெட்ரிக் டன் நெல்மணிகள் அரவைக்கு அனுப்பப்படாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிரந்தர மற்றும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

லாரிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் கடந்த ஒரு வாரமாக நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படவில்லை. இதனால், பெரும்பாலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 5,000 முதல் 7,000 நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 5 சதவீத அறுவடைப் பணிகள் நிறைவடையாத கிராமங்களில் உள்ள விவசாயிகள் அந்த நெல்லினை அறுவடை செய்யும்போது, அருகாமையில் திறந்து இருக்கும் நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம் என நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் நளினா தெரிவித்துள்ளனா்.

கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் மழையால் சேதம் மற்றும் வெயிலால் எடை குறைவு போன்ற இழப்புகளுக்கு பட்டியல் எழுத்தா்களிடம் இருந்தே தொகை பிடித்தம் செய்யப்படும் என்பதால், நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு அனுப் வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும், அக்டோபா் 15-ஆம் தேதிக்குப் பிறகு, மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நிரந்தர மற்றும் திறந்தவெளி கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 99,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளையும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 23,000 மெட்ரிக் டன் நெல்லினையும் உடனடியாக அரவைக்கு அனுப்பி வைத்து நெல்மணிகள் சேதம் அடைவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.