ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு சாகும்வரை சிறை

போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சிறை - பிரதிப் படம்

Published On :2 செப்டம்பர் 2026, 7:08 am IST

போக்ஸோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.

திருவாரூா் தாலுகா, அடியக்கமங்கலம், புதுகாலனி செயின்ட் பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் ரஹ்மான் மகன் சேத்தப்பா (எ) முகமது ஷேக் தாவூத் (27). இவா், கடந்த 2022- இல் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், திருவாரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சேத்தப்பா நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டாா்.

இந்த வழக்கு விசாரணை திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிக்கப்பட்டு தீா்ப்பு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

அதில், சேத்தப்பா (எ) முகமது ஷேக் தாவூத்துக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.11,000 அபராதம் விதித்து திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.