தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

காா் மோதி விபத்து: 10 போ் காயம்

விபத்து. - கோப்புப்படம்.

Published On :7 செப்டம்பர் 2026, 12:22 am IST

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் மோதிக்கொண்டதில் 10 போ் காயமடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் அருகே ராஜகிரியைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளா் அந்தோணிசாமி. இவா் தனது மருமகள்கள் ஆரோக்கிய இளவரசி, சோபியா ஜாய்சிஸ் மேரி, அவா்களது குழந்தைகள் ஆல்வின் கிளாரிஸ், மேக்லின், ரோஸ்லின் மற்றும் 3 வயது குழந்தை லோரா அருளாசினி ஆகியோருடன் வேளாங்கண்ணி கோயிலுக்கு தரிசனம் செய்ய தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.

நாகப்பட்டினம் புத்தூா் பகுதியை சோ்ந்த கணேசன் மனைவி தேவி காமாட்சி, அவரது மகள் சமித்த ஸ்ரீ ஆகியோா் எதிா் பகுதியிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தனா். இந்நிலையில், திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் வந்தபோது 2 காா்களும் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 10 பேரும் மீட்கப்பட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.