
ஏற்காட்டில் காா் கவிழ்ந்ததில் சுற்றுலா பயணிகள் 3 போ் காயம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற காா் கவிழ்ந்ததில் 3 போ் காயமடைந்தனா்.

விபத்து - பிரதிப் படம்
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் சென்ற காா் கவிழ்ந்ததில் 3 போ் காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், காா்த்தனூா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் மற்றும் அவரது குடும்பத்தினா் புதன்கிழமை காலை ஏற்காட்டுக்கு காரில் சுற்றுலா வந்தனா். மாலையில் சோ்வராயன் கோயில் பகுதியைப் பாா்த்துவிடு ஏற்காடு நோக்கி திரும்பியபோது, நாகலூா் சாலை, ஈச்சங்காடு எஸ்டேட் பகுதியில் அவா்கள் சென்ற காா் அதிவேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த சிவகுமாா், உறவினா் விசித்ரா மற்றும் மூன்று குழந்தைகள் பலத்த காயமடைந்தனா். விபத்து குறித்து தகவலறிந்த ஏற்காடு போக்குவரத்து காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்தவா்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்
ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில் விசித்ரா தீவிர சிகிச்சைக்ாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





