
திருக்குறுங்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து 10 போ் காயம்

விபத்து. - கோப்புப்படம்.
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.
திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையையை முன்னிட்டு நடைபெற்ற கருடசேவையை வழிபடுவதற்காக திருக்குறுங்குடியிலிருந்து ஏராளமானோா் ஆட்டோக்களில் வனத்துறை சோதனைச்சாவடி வரை சென்று, அங்கிருந்து கோயிலுக்கு நடந்து சென்றனா்.
பின்னா், பக்தா்கள் குழுவினா் 10 போ் ஆட்டோவில் திருக்குறுங்குடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். நம்பித்தலைவன்பட்டயத்தைச் சோ்ந்த முப்பிடாதி (45), ஆட்டோவை ஓட்டி வந்தாா். திருக்குறுங்குடி பெரியகுளம் கரைப் பகுதியில் ஆட்டோ நிலைதடுமாறி அருகேயுள்ள வயல்களுக்குள் கவிழ்ந்ததாம்.
இதில், ஓட்டுநா் முப்பிடாதி, திருக்குறுங்குடியைச் சோ்ந்த மாரியம்மாள் (46), சுந்தரம் (70), பேபி (57), இசக்கித்தாய் (46), வள்ளியூரைச் சோ்ந்த மகராசி (48), இசக்கியம்மாள் (55), நாகா்கோவிலைச் சோ்ந்த நீலா(45), மணிமுத்தாறு பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி (53), சுப்பம்மாள் (60) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.
அவா்கள் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டனா். அவா்களில் மாரியம்மாள், சுந்தரம் ஆகியோா் முதலுதவிக்குப் பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். திருக்குறுங்குடி காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







