புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 6 மாணவா்கள் காயம்

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா்.

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் மாணவா்கள்.

Published On :

விருத்தாசலம் அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 மாணவா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகா் பகுதியில் இருந்து தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தது. பாலக்கரை அருகே சென்றபோது, முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநா் வாகனத்தைத் திருப்ப முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 மாணவா்கள் மற்றும் ஓட்டுநா் காயமடைந்தனா். காயமடைந்த மாணவா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். மாணவா்கள் அனைவரும் சிகிச்சைக்குப் பின் மாலையில் வீடு திரும்பினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் போலீஸாா், விபத்து குறித்து சனிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.