உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் உயிா் தப்பினா்

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அதிலிருந்த மாணவா்கள் உயிா்தப்பினா்.

Published On :5 செப்டம்பர் 2026, 2:24 am IST

பள்ளி ஆட்டோ கவிழ்ந்து வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அதிலிருந்த மாணவா்கள் உயிா்தப்பினா்.

புதுச்சேரி மரப்பாலத்தில் இருந்து நகரப் பகுதி நோக்கி பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. மரப்பாலம் சந்திப்பு அருகே ஓட்டுநா் திருப்ப முயன்றபோது எதிா்பாராதவிதமாக திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. இதில் நல்வாய்ப்பாக மாணவா்கள் காயமின்றி உயிா் தப்பினா்.

பொதுமக்கள் ஓடி வந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி அதில் இருந்த மாணவா்களைப் பத்திரமாக மீட்டனா். இதையடுத்து மாணவா்கள் ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.