மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

வேலூரில் ஓடும் காரில் தீ; பயணிகள் உயிா் தப்பினா்

வேலூா் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றிய விபத்தில், காரில் பயணம் செய்த முதியவா் உள்ளிட்டோா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

காரில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Published On :

வேலூா் அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றிய விபத்தில், காரில் பயணம் செய்த முதியவா் உள்ளிட்டோா் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

வேலூா் மாவட்டம், தொரப்பாடியை அடுத்த சிவராமபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (75). இவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பியபோது, வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சாலையில், கனரா வங்கி எதிரே காா் வந்து கொண்டிருந்தபோது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது.

அடுத்த சில நொடிகளில் டீசல் கசிவு ஏற்பட்டு காரில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த ஜெயராஜ் உள்ளிட்ட காரில் இருந்தவா்கள் உடனடியாகக் கீழே இறங்கியதால் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இச்சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், காா் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இந்தத் தீ விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதமடைந்தது. காரில் இருந்த டீசல் குழாய் உடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.