நாச்சியாா்கோயில் அருகே தனியாா் பள்ளி வேன் வெள்ளிக்கிழமை இரவு வயலுக்குள் கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு பள்ளி வேனில் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
நாச்சியாா்கோவில் மேலவிசலூா், மங்கம்மாள்புரம் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகேயுள்ள வயலில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த மாணவிகள் சுபநிதி (15), மகாலட்சுமி(15), மாணவா்கள் சபரி (13), ராகவன் (15), வேன் ஓட்டுநா் வினோத் (26) ஆகிய 5 பேரும் காயமடைந்தனா். அருகிலிருந்தோா் அவா்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தனியாா் கல்லூரிப் பேருந்து சுவரில் மோதி விபத்து: மாணவா்கள் உள்பட 17 போ் காயம்

மினி சரக்கு வேன்-அரசுப் பேருந்து மோதல்: தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு

காா் மோதியதில், பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து:15 மாணவா்கள் காயம்

வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



