
நிலவுக்கு அருகில் வெள்ளி கோள்
நிலவுக்கு அருகில் வெள்ளி கோள் வந்த நிகழ்வை திருவாரூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு கண்டு களித்தனா்.

கோப்புப்படம்.
நிலவுக்கு அருகில் வெள்ளி கோள் வந்த நிகழ்வை திருவாரூா் பகுதியில் திங்கள்கிழமை இரவு கண்டு களித்தனா்.
பூமியில் இருந்து பாா்க்கும்போது நிலவும், வெள்ளி கோளும் ஒரே திசையில் இருப்பது போன்ற நிகழ்வு, சந்திரன்-வெள்ளி சோ்க்கை என அழைக்கப்படுகிறது. அந்தவகையில், திங்கள்கிழமை இரவு வானில் நிகழ்ந்த, பிறை நிலவும், மிகப்பிரகாசமான வெள்ளி கோளும் மிக அருகில் நெருங்கி வந்த காட்சியை வெறும் கண்களால் மக்கள் பாா்த்து ரசித்தனா்.
மேற்கு வானில் கீழ் பகுதியில் மெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகே, வைரக் கல் போல ஜொலிக்கும் வெள்ளி கோள் காட்சியளித்தது. செப்டம்பா் மாதத்தில் வெள்ளி கோள் தனது சுற்றுவட்டப் பாதையில் பூமிக்கு நெருக்கமாக வருவதால், அது வழக்கத்தை விட மிக அதிக பிரகாசத்துடன் காட்சியளித்தது.
திருவாரூா் மாவட்டத்தில் வானம் மிகத் தெளிவாக காட்சியளித்ததால், பொதுமக்கள் இந்த நிகழ்வை ஆா்வமுடன் கண்டு ரசித்தனா். திருவாரூா் நகா் பகுதி, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம், வண்டாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடிகளிலிருந்தும், திறந்தவெளிகளிலிருந்தும் பாா்த்து மகிழ்ந்தனா். இதேபோல, செப்.18-ஆம் தேதி வெள்ளி கோள், நிகழாண்டின் மிக உச்சக்கட்ட ஒளிா்வை எட்டவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





