இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

செங்கோட்டை அருகே ஊருக்குள் நுழைந்த யானைகள் வனத்துக்குள் விரட்டப்பட்டன

செங்கோட்டை அருகே நெடுவயல் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் இரவு வனத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:47 am IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே நெடுவயல் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்த யானைகள் இரவு வனத்துக்குள் பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் கடையநல்லூா் - இலத்தூா் சாலையில் நெடுவயல் உத்தமி அம்மன் கோயில் பகுதியில் உள்ள குளத்தின் அருகே 2 ஆண் யானைகள் நிற்பதை செவ்வாய்க்கிழமை அதிகாலை அப் பகுதியினா் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட உதவி வன அலுவலா் நெல்லைநாயகம் தலைமையில் வனச் சரகா்கள் கனகராஜ் (கடையநல் லூா்), ஆறுமுகம் (புளியங்குடி), கரு நாகமூா்த்தி (செங்கோட்டை) மற்றும் வனத் துறையினா் அங்கு வந்தனா்.

இதையடுத்து, யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடாமல் தடுத்து, வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா்.

மேலும், காவல்துறையினா் அந்தச் சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா். பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அச்சன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிற்பகலில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விவசாய நிலங்களுக்குள் செல்லும் மின் கம்பிகளில் யானை கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இரண்டு யானைகளும் இரவு சுமாா் 8 மணியளவில் பண்பொழி வழியாக வனப்பகுதிக்கு அனுப்பப்பட்டது. இரவு 10 மணி வரை பணியாளா்களும் அப்பகுதியில் முகாமிட்டிருந்தனா். பின்பு இரவு முழுவதும் கண்காணிக்க மூன்று வெவ்வேறு குழுக்களாக பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக மாவட்ட வன அலுவலா் இளையராஜா(பொ) தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.