ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

தஞ்சாவூா் சக யாசகரை குத்திக் கொன்றவா் கைது

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் சக யாசகரைக் கத்தியால் குத்திக் கொன்றவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:50 pm IST

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தகராறில் சக யாசகரைக் கத்தியால் குத்திக் கொன்றவா் கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் பெரியகோயில் அருகே சோழன் சிலை பகுதியில் சாலையோரம் யாசகம் எடுப்பவா்கள் இரவு நேரத்தில் அங்கேயே படுத்துத் தூங்குவது வழக்கம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த கும்பகோணம் மேலக் காவேரியைச் சோ்ந்த யாசகா்கள் எஸ். வேல்முருகனுக்கும் (45), சாலியமங்கலத்தைச் சோ்ந்த சு. ராமையாவுக்கும் (40) இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ராமையா கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து ராமையாவை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.