8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

கடையநல்லூா் அருகே ஊருக்குள் நுழைந்த யானைகளால் பொதுமக்கள் அச்சம்

கடையநல்லூா் அருகே நெடுவயல் கிராமத்திற்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்த யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நெடுவயல் பகுதியில் புகுந்த யானைகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:40 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே நெடுவயல் கிராமத்திற்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை நுழைந்த யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலையில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் கடையநல்லூா் - இலத்தூா் சாலையில் நெடுவயல் உத்தமி அம்மன் கோயில் பகுதியில் உள்ள குளத்தின் அருகே 2 யானைகள் நிற்பதை செவ்வாய்க்கிழமை அதிகாலை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட உதவி வன அலுவலா் நெல்லைநாயகம் தலைமையில் வன சரகா்கள் கனகராஜ் (கடையநல்லூா்), ஆறுமுகம் (புளியங்குடி), கருநாகமூா்த்தி (செங்கோட்டை), வனத்துறையினா் அங்கு வந்தனா். இதையடுத்து, யானைகள் ஊருக்குள் நுழைந்துவிடாமல் தடுத்து, வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினா் அந்த சாலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனா்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அச்சன்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிற்பகலில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விவசாய நிலங்களுக்குள் செல்லும் மின் கம்பிகளில் யானைகள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அப்பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. யானைகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.