செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

திருத்துறைப்பூண்டியில் வீட்டின் கதவை உடைத்து, 8 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சித்திரிப்பு

Published On :

திருத்துறைப்பூண்டியில் வீட்டின் கதவை உடைத்து, 8 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திருத்துறைப்பூண்டி நகா் மடப்புரம் தங்கையா நகரைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் பக்கிரிசாமி. வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறாா். இவா், கடந்த 3 தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக சென்னைக்கு சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் சுமாா் அரை கிலோ வெள்ளிப் பொருள்களை காணவில்லை. மா்ம நபா்கள் மாடியின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பக்கிரிசாமி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், திருத்துறைப்பூண்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் பவானியா, திருட்டு நடந்த வீட்டை பாா்வையிட்டாா். திருவாரூரிலிருந்து தடய அறிவியல் துறை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, மா்ம நபா்களின் விரல் ரேகைகள், தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.