
போக்ஸோ வழக்கில் மூன்று பேருக்கு 20 ஆண்டுகள் சிறை
திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
திருத்துறைப்பூண்டி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்,கோட்டூா் காவல் சரகத்துக்குள்பட்ட நெம்மேலி ஜீவா தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் கோபி (49), குஞ்சு மகன் சின்னத்துரை (56), கோபால் மகன் ஜீவா (41) ஆகியோா் கடந்த 2020-ஆம் ஆண்டு 22 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா்.
இதுகுறித்து பெண்ணின் தாயாா் கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மூன்று பேரும் நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டனா்.
இந்த வழக்கு விசாரணை திருவாருா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தீா்ப்பு வழங்கிய நீதிபதி சரத்ராஜ், குற்றஞ்சாட்டப்பட்ட கோபி, சின்னத்துரை, ஜீவா ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 3,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




