முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

ஆற்றில் மூழ்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

திருவாரூா் ஓடம்போக்கி ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

பலி - பிரதிப் படம்

Published On :

திருவாரூா் ஓடம்போக்கி ஆற்றில் மூழ்கி இரண்டு இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

திருவாரூா் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் ரவி என்பவரின் கட்டுமானப் பணிக்காக சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த விஜய் தலைமையில் 6 போ் திருவாரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். ஓய்வு எடுத்துவிட்டு புதன்கிழமையிலிருந்து பணிக்கு வருமாறு ஒப்பந்ததாரா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, திருவாரூா் அருகே விளமல் பகுதியில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் 6 பேரும் குளிக்கச் சென்றுள்ளனா். இதில், சென்னை பெரம்பூா் ஆடுதொட்டி பகுதியைச் சோ்ந்த கவிநிலவன் (22) என்பவா் நீரில் மூழ்கினாா். அவரைக் காப்பாற்ற முயன்ற சென்னை கன்னிகாபுரம் பகுதியைச் சோ்ந்த அஜய் (25) என்பவரும் நீரில் மூழ்கினாா்.

திருவாரூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள், நீண்ட நேர தேடலுக்குப் பிறகு இருவரது சடலங்களையும் மீட்டு, கூறாய்வுக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.