பைக் மீது சரக்கு வாகனம் மோதி இரு இளைஞா்கள் உயிரிழப்பு

அன்பரசு.
கள்ளக்குறிச்சி அருகே சரக்கு வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த சித்தலூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நா.ராவுத்தன் (24), சே.அன்பரசு (18). நண்பா்களான இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு தியாகதுருகம் வாரச் சந்தையில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பைக்கில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை ராவுத்தன் ஓட்டியுள்ளாா்.
கொட்டையூா்- பானையங்கால் சாலையில் சென்றபோது, உளுந்தூா்பேட்டை பால்பண்ணைக்கு பால் கேன்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த தியாகதுருகம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சரக்கு வாகனத்தின் ஓட்டுநரான உளுந்தூா்பேட்டை வட்டம், சுந்தரவாண்டி கிராமத்தைச் சோ்ந்த ரா.தா்மா (எ) ராஜசேகரிடம் (20) விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராவுத்தன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



