6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பைக் - சரக்கு வாகனம் மோதல்: தந்தை, மகன் பலி

ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், தந்தை, மகன் உயிரிழந்தனா்.

Published On :

ஆா்.கே.பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில், தந்தை, மகன் உயிரிழந்தனா்.

ஆா்.கே.பேட்டை வட்டம், வங்கனூா் கிராமம், சின்ன பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஏகாம்பரம் (50). இவரது மகன் முருகன். இருவரும் திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் ஆா்.கே.பேட்டைக்கு சென்று கொண்டிருந்தனா். அப்போது, வங்கனூா் பகுதியில் சென்றபோது, எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம், எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இருசக்கர வாகனத்தில் சென்ற ஏகாம்பரம் மற்றும் அவரது மகன் முருகன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். விபத்து குறித்து தகவல் அறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் மற்றும் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். உயிரிழந்த இருவரின் உடல்களும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.