நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நொய்டாவில் மழைநீர் சேகரிப்புக் கருத்தரங்கு

அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்க நிகழ்ச்சி நொய்டா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 6:46 pm

தினமணி

அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்க நிகழ்ச்சி நொய்டா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தரங்கை உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.கே. சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், மழை நீர் சேகரிப்புக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.

மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உறுப்பினர் என்.வரதராஜ், குடியிருப்புகளில் நிலத்தடி நீரையும், மழைநீரையும் சேகரிப்பது, பாதுகாப்பது ஆகிய முறைகள் குறித்து விரிவாகப் பேசினார். மழைநீர் சேகரிப்புத் தொடர்பாக குடியிருப்போர் எழுப்பி சந்தேகங்களுக்கு அவர் விளக்கமும் அளித்தார்.

இக்கருத்தரங்கில், நொய்டா பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கங்களின் தலைவர்கள், செயலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.