இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

சோம்நாத் பார்திக்கு பிடிஆணை:தில்லி நீதிமன்றம் பிறப்பித்தது

மனைவி அளித்த குடும்ப வன்முறை புகார் தொடர்பான வழக்கில், தில்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பார்தியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

Updated On :

மனைவி அளித்த குடும்ப வன்முறை புகார் தொடர்பான வழக்கில், தில்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏவும், முன்னாள் சட்ட அமைச்சருமான சோம்நாத் பார்தியின் முன்ஜாமீன் கோரும் மனுவை தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

மேலும், தில்லி காவல் துறையினர் தாக்கல் செய்த மனு மீது சோம்நாத் பார்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிஆணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

சோம்நாத் பார்தி தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கர்க், "2011, அக்டோபர் 17-ஆம் தேதி சோம்நாத் பார்திக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் விவகாரத்தில், பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவு முன் அளித்த உறுதியை சோம்நாத் பார்தி மீறிவிட்டதாகவும், தனது நடத்தையை அவர் மாற்றிக்கொள்ளவில்லை என்றும் இரண்டாவது முறையாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். இதைக் கருத்தில்கொண்டு மனுதாரரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டார்.

சோம்நாத் பார்தி சார்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜய் அகர்வால் கூறுகையில், "இந்த உத்தரவை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்' என்றார்.

இந்நிலையில், பிற்பகலில் இதே வழக்கில் சோம்நாத் பார்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிஆணை உத்தரவை பிறப்பிக்க கோரி தில்லி காவல் துறையின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, தில்லி பெருநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மானிக்கா முன் விசாரணைக்கு வந்தது.

"குடும்ப வன்முறை வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மூன்று முறை தில்லி காவல் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பியும் சோம்நாத் பார்தி விசாரணைக்கு வரவில்லை. போலீஸாரின் விசாரணைக்கும் அவர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதனால், அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட வேண்டும்' என்று அம்மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இம்மனுவை ஏற்பதாக கூறிய நீதிபதி, சோம்நாத் பார்திக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து, சோம்நாத் பார்தி எம்எல்ஏ, போலீஸாரின் கைது நடவடிக்கையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.