சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

தில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்கள்: என்எச்ஏஐக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பானிபட் வழியாக தில்லிக்கு செல்லும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் (என்எச்ஏஐ), ஹரியாணா மாநில அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On :

பானிபட் வழியாக தில்லிக்கு செல்லும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும்படி, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கும் (என்எச்ஏஐ), ஹரியாணா மாநில அரசுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத் தலைவரும், நீதிபதியுமான ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:

தில்லிக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தில்லி காவல் துறையும், என்எச்ஏஐயும் அளித்த தகவல்களில் சில முரண்பாடுகள் இருப்பது போல தெரிகிறது. எனவே, பானிபட் வழியாக தில்லிக்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றன? என்ற தகவலை என்எச்ஏஐயும், ஹரியாணா மாநில அரசும், அடுத்தக் கட்ட விசாரணை நடைபெறும் நாளான செப்டம்பர் 21ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, தில்லி காவல் துறை சார்பில் தீர்ப்பாயம் முன்பு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், ராஜோக்ரி, சிங்கு ஆகிய எல்லைகள் வழியாக தில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை, சிங்கு எல்லை வழியாக 4,672 சரக்கு வாகனங்களும், ராஜோக்ரி வழியாக 5,036 சரக்கு வாகனங்களும் தில்லிக்குள் நுழைந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.