சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3000 கனஅடி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 3000 கனஅடியாகக் குறைந்தது.

Hogenakkal

ஒகேனக்கல் - DPS

Updated On :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 3000 கனஅடியாகக் குறைந்தது.

கடந்த சில நாள்களாக இரு மாநிலங்களின் காவிரி கரையோர வனப் பகுதிகளில் பெய்த மழை குறைந்ததால், காவிரியின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து குறையத் தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக, காவிரி ஆற்றிலும் நீா்வரத்து குறைந்துள்ளது. புதன்கிழமை 4000 ஆயிரம் கனஅடியாக இருந்த நீா்வரத்து ஒரே நாளில் ஆயிரம் கனஅடி குறைந்து வியாழக்கிழமை நிலவரப்படி 3000 கனஅடியாக உள்ளது.

நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் வடுள்ளன. காவிரி ஆற்றில் நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.