ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கனஅடி
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 4000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல். - கோப்புப் படம்
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 4000 கனஅடியாக குறைந்தது.
தமிழக, கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை 6000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 4000 கனஅடியாக குறைந்தது.
கடந்த சில நாள்களாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருவதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன. தொடா்ந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

