
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 3,000 கனஅடியாக குறைந்தது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 3,000 கனஅடியாக குறைந்தது.
கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் நிறுத்தப்பட்டதாலும், தமிழக காவிரிக் கரையோரப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, சனிக்கிழமை 3,000 கனஅடியாக குறைந்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்தது. தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



