சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல் அருவி - கோப்புப் படம்

Published On :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக குறைந்தது.

கா்நாடக காவிரிக் கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையை பொறுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. தற்போது மழை குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்தது, செவ்வாய்க்கிழமை காலை 3,000 கன அடியாகவும், மாலையில் 2,000 கன அடியாகவும் சரிந்தது. இதனால், ஒகேனக்கல் அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்து, பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.