
நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் ஹெச்.சி.குப்தாவுக்கு முக்கியப் பங்கு: சிபிஐ குற்றச்சாட்டு
நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியது.
நிலக்கரிச் சுரங்க முறைகேட்டில் மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியது.
இதுதொடர்பான வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்னிலையில் திங்கள்கிழமை, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது, சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சஞ்சய் குமார் முன்வைத்த வாதம்:
நிலக்கரி அமைச்சகத்தின் முன்னாள் செயலரான ஹெச்.சி.குப்தா, நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பான பரிசீலனைக் குழுவின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அப்போது அவர், பிரம்மபுத்திரா நிலக்கரிச் சுரங்கத்தை பிஎஸ்எம்பிஎல் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ய, பிரதமர் அலுவலகத்துக்கு தவறான வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.
மேலும், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கத்தை ஒதுக்க, அப்போதைய நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ் ஆட்சேபம் தெரிவித்தபோதும், அந்த நிறுவனத்துக்கு சுரங்கத்தை ஒதுக்க பரிந்துரைத்துள்ளார் என்று தெரிவித்தார்.
அதையடுத்து, நீதிபதி பரத் பராசர், விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






