விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நஜீப் ஜங்குக்கு கேஜரிவால் திடீர் ஆதரவு

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் செயல்பாடுக்கு பாஜகவின் ஒரு பிரிவு எம்.பி.க்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில், திடீர் திருப்பமாக நஜீப் ஜங்குக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On :

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் செயல்பாடுக்கு பாஜகவின் ஒரு பிரிவு எம்.பி.க்களும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டு வரும் நிலையில், திடீர் திருப்பமாக நஜீப் ஜங்குக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பதிவில், "நஜீங் ஜங்கை நீக்குவது மட்டுமே தீர்வாகாது.

தில்லி மாநில விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடாமல் இருப்பதே நீடித்து வரும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்' என்று கூறியுள்ளார்.

வடமேற்கு தில்லி மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோயலைத் தாக்கியதாக, அத்தொகுதி மக்களவை பாஜக எம்.பி. உதித் ராஜின் உதவியாளர்கள் மூவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

இதையடுத்து, "தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், மக்கள் பிரதிநிதிகளின்  கருத்துகளைக் கவனத்தில் கொள்ளவில்லை. அவர்களைச் சந்திக்கக்கூட அவர் நேரம் ஒதுக்குவதில்லை. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்றார்.

இதேபோல, மற்ற பாஜக எம்.பி.க்களும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கின் செயல்பாடுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

காங்கிரஸ் கருத்து: இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் "முகவர்' போல தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் செயல்படுகிறார். அவர் பதவி விலகுவதுதான் சிறந்தது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட கருத்துகள் மூலம் நேரெதிர் களத்தில் அரசியல் நடத்தி வரும் தில்லியின் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும், காங்கிரஸும் நஜீப் ஜங் விவகாரத்தில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

கேஜரிவால் ஆதரவு: இந்நிலையில், இந்த இரு கட்சிகளுக்கும் பதில் அளிக்கும் வகையில் நஜீப் ஜங்குக்கு ஆதரவாக கேஜரிவால் பதிவு செய்துள்ள சுட்டுரை கருத்து கருதப்படுகிறது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை நீக்குமாறு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் வலியுறுத்துவது விசித்திரமாக உள்ளது. நஜீப் ஜங் மீதுதான் தவறு உள்ளதா? கிடையாது. பிரதமர் அலுவலகம் என்ன கட்டளையிடுகிறதோ, அதைத்தான் நஜீப் ஜங் நிறைவேற்றி வந்தார்.

எனவே, நீடித்து வரும் பிரச்னைகளுக்கு நஜீப் ஜங்கை நீக்குவது மட்டுமே தீர்வு ஆகாது. அவருக்கு அடுத்ததாக நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநரும், பிரதமர் அலுவலகம் என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதைத்தான் செய்வார்.

தில்லி அரசின் நடவடிக்கைகளில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதை நிறுத்தினால்தான் இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். நஜீப் ஜங் சிறந்த மனிதர். ஆனால், தீய எண்ணம் கொண்ட அரசியல் தலைமையின் கீழ் அவர் செயல்படுகிறார் என்று கேஜரிவால் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தில்லி துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறுகையில், "தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. ஊடகங்களில் தெரிவித்த கருத்தை நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடியிடமே கூறியிருக்கலாம்' என்றார்.

ஆம் ஆத்மி கட்சி கருத்து: இந்நிலையில், துணைநிலை ஆளுநருக்கு எதிராக கருத்து வெளியிடும் பாஜகவின் செயல் முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு ஒப்பாகும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி, ஆட்சியைக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, மத்தியில் ஆளும் பாஜக, துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி தில்லி அரசின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்தது.

தற்போது, நஜீப் ஜங்கை நீக்க வேண்டும் என சில பாஜக எம்.பி.க்கள் கூறுவது முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு சமம். அரசியல் காரணங்களுக்காக துணைநிலை ஆளுநர் பதவியை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

அதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.

காங்கிரஸ் மறுப்பு

தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை பதவி விலகக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளதாக அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளதற்கு அக்கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அஜய் மாக்கன், தன் சுட்டுரையில், "துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் எவ்விதக் கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. எனவே, கேஜரிவால் தன் நிலைப்பாட்டை திரும்பப் பெற வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 தில்லி காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் ஷர்மிஸ்டா முகர்ஜி தன் சுட்டுரையில், "இதுபோன்ற தவறான செய்திகளை தெரிவிக்க வேண்டாம் என்று அரவிந்த் கேஜரிவாலை கேட்டுக் கொள்கிறேன். முன்னதாக துணைநிலை ஆளுநரை கடுமையாக விமர்சித்து வந்த கேஜரிவால், இப்போது திடீரென தன் நிலைப்பாட்டை ஏன் மாற்றி கொண்டுள்ளார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.