நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும்:கன்னையா குமாருக்கு வெங்கய்ய நாயுடு அறிவுரை

அரசியலில் தலையிடுவதை விடுத்து, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாருக்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

அரசியலில் தலையிடுவதை விடுத்து, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் அமைப்புத் தலைவர் கன்னையா குமாருக்கு மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய

நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார்.

தேச விரோத வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளிவந்ததும் பிரதமர் நரேந்திர மோடியை கன்னையா குமார் விமர்சித்துப் பேசியுள்ள நிலையில், வெங்கய்ய நாயுடு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகள் வருமாறு:

கன்னையா குமார் வியாழக்கிழமை பேசிய பேச்சுக்களுக்கு, எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கன்னையா குமாருக்கு இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது; அதை அவரும் அனுபவித்து வருகிறார். பல்கலைக்கழகங்கள், கல்விக்கான இடங்களாகும். அங்கு அரசியலில் ஈடுபடக் கூடாது. கல்வியிலேயே கவனம் செலுத்த வேண்டும்.

அரசியலில் மாணவர்களுக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில், படிப்பை உதறிவிட்டு, அரசியலில் குதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் ஓரிடம் கூட பெறாத தனக்கு விருப்பமான அரசியல் கட்சியில் கன்னையா குமார் சேரலாம் என்று சுட்டுரை பதிவுகளில் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங் கைவிரிப்பு: இதனிடையே, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷங்கள் எழுப்பப்பட்டது குறித்து தில்லி போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கன்னையா குமாருக்கு அரசியல் கட்சிகள் ஆதரவுகன்னையா குமாருக்கு காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் நிதீஷ் குமார், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆஸாத் பேசுகையில், "4 இளைஞர்கள் தேச விரோத கோஷமிடுவதால், நாடு பிளவுபட்டு விடாது. முன்பு இதுபோல கோஷம் எழுப்பியவர்களில் சிலர் நீதிபதிகளாகவும், பேராசிரியர்களாகவும் தற்போது உள்ளனர். இது மாணவர் பருவத்தினருக்கான தனி பண்பாகும். அதேசமயம், ஆட்சியில் இருப்பவர்கள் பிரச்னைகளை உருவாக்கினால்தான் நாடு பிளவுபடும்' என்றார்.

பாட்னாவில் நிதீஷ் குமார் கூறுகையில், "பட்டினி, வறுமை, சகிப்பின்மை ஆகியவற்றில் இருந்து விடுதலை பெறுவது தொடர்பாக தனது கருத்துகளை கன்னையா குமார் வெளியிட்டுள்ளார். அவர் மீது தேச விரோத வழக்கு தொடுத்தவர்களைக் காட்டிலும், கன்னையா குமார் அதிக தேசப்பற்று கொண்டவர்' என்றார்.

இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஸ்வனி குமார் ஆகியோரும் கன்னையா குமாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.