மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகளை "பேடிஎம்' மூலம் ரீச்சார்ஜ் செய்யும் வசதி அறிமுகம்
தில்லி மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகளை "பேடிஎம்' செல்லிடப்பேசி செயலி மூலம் ரீச்சார்ஜ் செய்யும் வசதி தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) சார்பில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தில்லி மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகளை "பேடிஎம்' செல்லிடப்பேசி செயலி மூலம் ரீச்சார்ஜ் செய்யும் வசதி தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) சார்பில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
"பேடிஎம்' மின்னணு வர்த்தக இணையதளத்தின் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா முன்னிலையில், இந்த புதிய வசதியை டிஎம்ஆர்சி மேலாண்மை இயக்குநர் மங்கு சிங் தொடங்கி வைத்தார்.
இந்த ரீச்சார்ஜ் வசதி குறித்து டிஎம்ஆர்சி அதிகாரி கூறியதாவது: தில்லி மெட்ரோ ரயில்களில் ஸ்மார்ட் கார்டுகளைப் பயன்படுத்தி பயணம் செய்வோர் அதை ரீச்சார்ஜ் செய்வதற்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் பிரத்யேக இயந்திர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தில்லி, என்சிஆர் பகுதிகளில் உள்ள ஐசிஐசி வங்கியின் வணிகத் தொடர்பு வலையலைப்பு (மையங்கள்) மூலம் ஸ்மார்ட் கார்டுகளை மீள்நிரப்பு செய்யும் வகையிலான வசதி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
சுமார் 1.60 கோடி தில்லி மெட்ரோ ஸ்மார்ட் கார்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. தினமும் தில்லி மெட்ரோ ரயில் ஒருங்கிணைப்பில் சுமார் 10 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் புதிதாக வழங்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு "டாப்-அப்' செய்து கொள்ளலாம். இந்த நிலையில், செல்லிடப்பேசி பயன்படுத்துவோர் மின்னணு வர்த்தக இணையதளம் நடத்தும் "பேடிஎம்' நிறுவனத்தின் செயலியைப் பயன்படுத்தி தில்லி ஸ்மார்ட் கார்டுகளை ரீச்சார்ஜ் செய்யும் வசதி டிஎம்ஆர்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பான முறை என்பதால் பயணிகள் தங்களது செல்லிடப்பேசியை பயன்படுத்தி பேடிஎம் செயலியில் ஒரு முறை மட்டும் ஸ்மார்ட் கார்டு அட்டை மற்றும் இணையதள வங்கி விவரங்களைப் பதிவு செய்தால் பிறகு தங்களது ஸ்மார்ட் கார்டுகளுக்கு தேவைப்படும் போது எளிதாக ரீச்சார்ஜ் செய்துகொள்ளலாம். மேலும், இணையதளம் வாயிலாகவும் ஸ்மார்ட் கார்டுகளுக்கு ரீச்சார்ஜ் செய்யலாம் என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





