வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தில்லி பல்கலை. மாணவர் தூக்கிட்டு தற்கொலை: குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை

தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:22 pm

DIN

தில்லி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தனது வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக
அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது: தில்லி துவாரகா செக்டார் 13 பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் ஆர்யன் தோமர்.  இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.  
தில்லி பல்கலைக்கழகத்
தின் ஆளுகைக்கு உள்பட்ட மோதிலால் நேரு கல்லூரியில் பி.ஏ.  இறுதியாண்டு படித்து வந்தார்.  
இந்நிலையில், சம்பவத்தன்று தோமரின் பெற்றோர்,  தம்பி ஆகியோர் ஷாம்லியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சென்றனர்.  இந்நிலையில்,  அங்கிருந்து ராஜ் ஆர்யன் தோமருக்கு அவரது தந்தை சஞ்சீவ் குமார் தோமர் செல்லிடப்பேசியில் அழைத்தார்.  
ஆனால்,  அவர் பதில் அளிக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சஞ்சீவ் காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணுக்கு (100)  தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸார் தோமரின் வீட்டுக்கு சென்றனர்.
கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டின் அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.  
இது குறித்து, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தோமரின் உடலில் காயம் ஏதும் இல்லை.  அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தோமர் இறந்து கிடந்த பகுதியில் தற்கொலை குறிப்பு ஏதும்  இல்லை.  அவர் "புளூவேல்' விளையாட்டில் ஈடுபட்டாரா?  என்பது குறித்து அறிவதற்காக செல்லிடப்பேசி ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.   
குடும்பத்தினரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,  மீண்டும் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.  

நொய்டாவில் இளைஞர் தற்கொலை
நொய்டாவில் உள்ள சதர்பூர் காலனியில் சுனில் (32) என்பவர் தனது வாடகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுனில் வேலையில்லாமல் தவித்து வந்ததாகவும், மனைவியுடன் ஏற்பட்ட தகறாறையடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.