ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவை: ஜனவரி மாதம் முதல் தில்லியில் தொடக்கம்

மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டத்தை ஜனவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் முடிவு செய்துள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:56 pm

DIN

மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டத்தை ஜனவரி மாதம் முதல் சோதனை அடிப்படையில் அமல்படுத்த தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் தலைமையில் ராஜ் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலர், போக்குவரத்துத் துறை சிறப்பு ஆணையர், தில்லி காவல் துறையின் தலைமை செய்தித் தொடர்பாளர், லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனை, ஜிடிபி மருத்துவமனை, டிடியு மருத்துவமனை ஆகியவற்றின் மருத்துவ கண்காணிப்பாளர்கள், ஜான் ஆம்புலன்ஸ் பிரகேட்டின் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் துணைநிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தில்லியின் கிழக்கு, வடகிழக்கு, ஷாதரா ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் ஆம்புலன்ஸ் சேவை அளிக்கும் திட்டதை ஜனவரி, 2018 முதல் சோதனை முறையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 16 மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸ்கள் இதில் ஈடுபடுத்தப்படும்.
நெரிசல் மிகுந்த பகுதிகளில் அவசர சிகிச்சை சேவையை மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் கொண்டு சேர்க்கும். அதன் மூலம் அவசர மருத்துவ சேவை கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறையும். உடனடி மருத்துவச் சேவை அளிப்பதில் பயிற்சி பெற்றவர்களே மோட்டார்சைக்கிள் ஆம்புலன்ஸை ஓட்டிச் செல்வார்கள். முதலுதவி மருத்துவ சேவை அளிக்கும் உபகரணங்களையும் அவர்கள் எடுத்துச் செல்வார்கள். ஆம்புலன்ஸ் வானகம் வரும் வரை அவர்கள் அவசர மருத்துவ சேவைகளை அளிப்பார்கள் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.