விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காணாமல் போன பெண் குழந்தை கால்வாயில் சடலமாக மீட்பு

வடகிழக்கி தில்லியில் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை, கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:  

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:36 pm

DIN

வடகிழக்கி தில்லியில் காணாமல் போன ஒன்றரை வயது குழந்தை, கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது:  
வடகிழக்கு தில்லி, கோகுல்புரி பகுதியைச் சேர்ந்த அக்குழந்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அதன் பிறகு திடீரென காணாமல் போனது. இந்நிலையில், பெற்றோரைத் தொடர்பு கொண்டு அக்குழந்தை பேசியுள்ளது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து போலீஸில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில், அடுத்த நாள் திங்கள்கிழமை அப்பகுதியில் உள்ள கால்வாயில் குழந்தையின் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.