ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

10 கிலோ தங்கம் கடத்தல்: 4 சீனர்கள்  தில்லி விமான நிலையத்தில் கைது

தில்லி விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் கடத்தியதாக சீன நாட்டைச் சேர்ந்த 4 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:29 pm

DIN

தில்லி விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் கடத்தியதாக சீன நாட்டைச் சேர்ந்த 4 பேரை சுங்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சுங்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், "தாய்வானில் இருந்து ஹாங்காங் வழியாக தில்லிக்கு சனிக்கிழமை வந்த சீனாவைச் சேர்ந்த 4 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. 
அதில், தங்கக்கட்டிகளை காகிதங்களில் சுற்றி, தங்கள் உடையில் மறைத்து வைத்திருந்ததை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் 4 சீனர்களும் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 3 கோடியாகும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரியாதில் இருந்து தில்லிக்கு வந்த 3 இந்தியர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 700 கிராம் தங்கத்தை சிறுசிறு துகள்களாகவும், 350 கிராம் தங்கம் கட்டியாகவும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1.05 கிலோ எடையுள்ள இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 31.56 லட்சம் இருக்கும் என்றும் இந்தத் தங்கத்தை கொண்டு வந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.