வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மோடி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்: மனோஜ் திவாரி

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை இந்த ஹோலிப் பண்டிகையை அவர்கள் கொண்டாடும் விதத்தில்

News image
Updated On :1 மார்ச் 2018, 9:00 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை இந்த ஹோலிப் பண்டிகையை அவர்கள் கொண்டாடும் விதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
தில்லி பாஜக சார்பில் ஹோலிப் பண்டிகை தில்லியில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் விஜய் கோயல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் குமார் மல்கோத்ரா, தில்லி சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓம் பிரகாஷ் சர்மா, ஜெகதீஷ் பிரதான் தேசிய பொறுப்பாளர்கள் பிரகல்ப்ஸ், அரவிந்த் மேனன், துணைப் பொறுப்பாளர் பவன் சர்மா, மாநில பொதுச் செயலர் சித்தார்த்தன், மாநில செயலர்கள் குல்ஜீத் சிங் சாகல்,ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பட்டியா, மாநகராட்சி மேயர்கள் கமல்ஜீத் ஷெராவத், நீமா பகத், ப்ரீத்தி அகர்வால் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்து கொண்டனர். 
இந்த நிகழ்வில் தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை அவர்கள் ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். 
இந்தப் பண்டிகையில் அனைத்து மத மக்களும் கலந்து கொண்டது பாஜகவின் மதச்சார்பற்ற தன்மையைக் காட்டி நிற்கிறது. விவசாயிகள், வணிகர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருமே இந்தப் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்றார் அவர். 
இந்தக் கொண்டாட்டங்களில் திகார் சிறைக் கைதிகள் தயாரித்த வர்ணப் பொடிகள் பயன்படுத்தப்பட்டன. 
கே.முத்துசாமி தலைமையிலான தில்லி பாஜகவின் தென் இந்தியப் பிரிவினர் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.