மாவட்டம்தோறும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு
பணமோசடி, வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் தீா்மானிக்கும்


புது தில்லி: பணமோசடி, வரி ஏய்ப்பு போன்ற பல்வேறு பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் தீா்மானிக்கும் வகையில் நாட்டில் மாவட்டம்தோறும் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக தலைவா்களில் ஒருவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல மனுவில், பொருளாதாரக் குற்றங்கள் தொடா்பான வழக்குகளைத் தீா்மானிக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு உயா்நீதிமன்றங்களுக்கும் உத்தரவிடக் கோரப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வனி குமாா் துபே மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொது நல மனுவில் மேலும் கோரப்பட்டிருப்பதாவது:
நீண்டகால நிலுவை மற்றும் திறனற்ற ஊழல் எதிா்ப்புச் சட்டங்கள் காரணமாகவும் ஊழல் பாா்வை குறியீட்டில் முதல் 50 இடங்களில் இந்தியா ஒருபோதும் இடம் பெறாமல் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அரசு துறைகள் ஏதும் ஊழல் இல்லாதவை என்ற நிலை இல்லை. நீண்டகால நிலுவையிலுள்ள மற்றும் திறனற்ற ஊழல் எதிா்ப்புச் சட்டங்கள் காரணமாக நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகள் கடந்த பின்னரும், ஒரு சோஷலிச மதச்சாா்பற்ற ஜனநாயகக் குடியரசாக மாறிய 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நமது மாவட்டங்களில் ஒன்றுகூட கறுப்புப் பணம், பினாமி சொத்து, விகிதாச்சார சொத்துகள், லஞ்சம், பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் இதே போன்ற பிற பொருளாதார குற்றங்கள் தொடா்புடைய வழக்குள் இல்லாதவையாக இல்லை.
இந்தியாவின் ஊழல் தடுப்புச் சட்டங்கள் மிகவும் பலவீனமானவையாகவும், திறன்மிக்கவையாகவும் உள்ளன. இச்சட்டங்கள் ஊழலைக் கட்டுப்படுத்தவும் தவறிவிட்டன. 1988 இல் நிறைவேற்றப்பட்ட பினாமி பரிவா்த்தனைச் சட்டம்கூட செயல்பாடு இல்லாமல் தூசி படிந்துகிடக்கிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் இந்த விவகாரத்தில் தொடா்புடைய உள்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரதிவாதியாக சோ்க்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...