நுண்ணுயிர்க் கழிவை விவசாய இடுபொருளாகப் பயன்படுத்த அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனிடம் திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.சத்யபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஹர்ஷ வர்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வி.சத்யபாமா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் அருள்புரம் உள்ளிட்ட இடங்களில் பொது சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஐவுளி சாயக் கழிவுகளிலிருந்து உற்பத்தியாகும் திடக் கழிவுகள் அனைத்தும் நச்சுத் தன்மை உடையவை என்று மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் தெரிவித்திருந்தது.
அன்றைய காலக் கட்டத்தில் தற்போதுள்ள சிறந்த தொழில்நுட்ப வசதிகள் இல்லை. தற்போது "பூஜ்ய நிலை சுத்திகரிப்பு' முறையில் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மறுசுழர்ச்சி முறையில் 99 சதவீதம் நல்ல தண்ணீரையும், உப்பையும் பிரித்தெடுத்து மறு உபயோகம் செய்யப்படுகிறது. மீதமுள்ள 1 சதவீதம் திடக் கழிவுகள் ரசாயனக் கழிவு, நுண்ணுயிர் கழிவு, கலப்பு உப்பு என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.
ரசாயனக் கழிவுகள் சிமெண்ட் ஆலைகளில் மூலப் பொருளாகவும், கலப்பு உப்பு மறு உபயோகத்திற்கான ஆய்வில் உள்ளது.
திடக் கழிவான நுண்ணுயிர்க் கழிவில் ரசாயனங்களோ அல்லது கேடு விளைவிக்கும் பொருள்களோ இல்லை என தமிழகத்தின் ஈரோட்டில் உள்ள "ஏவ் கேர்' என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த நுண்ணுயிர்க் கழிவு விவசாயத்திற்கு இடுபொருளாகவும், எரிசக்தித் திறன் அதிகம் இருப்பதால், நீராவி உலைகளில் விறகிற்குப் பதில் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும் என சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் சான்று அளித்துள்ளது. எனவே, இதை எரிபொருளாகவோ, விவசாயத்திற்கு உரமாகவோபயன்படுத்தினால் சுத்திகரிப்பு செலவு குறைந்து, பூஜ்ய நிலை சுத்திகரிப்புத் திட்டத்திற்கு உதவியாக இருக்கும்.
ஏற்கனவே, இது தொடர்பாக உரிய சான்றுகளுடன் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த நுண்ணுயிர்க் கழிவை விவசாயத்திற்கோ அல்லது எரிபொருளாகவோ பயன்படுதற்கோ அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வி.சத்யபாமா எம்.பி. கூறுகையில், "என்னுடைய மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஹர்ஷ் வர்தன், நுண்ணுயிர்க் கழிவை விவசாயத்திற்கு இடுபொருளாகப் பயன்படுத்தும் விஷயத்தில் உரிய ஆலோசனைகளைப் பெற சாயத் தொழில் சங்கத்தினருடன் விவாதிக்க ஏற்பாடு செய்யப்படுமென தெரிவித்துள்ளார்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்..! நியூசிலாந்து வீரரின் சாதனை!
ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டணம் இல்லை! ஈரான் உறுதி அளித்ததாக டிரம்ப் பதிவு!

வேளச்சேரி - தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் ஏன்?

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


